அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கோவையில் உள்ள மண்டல வளாகத்தில் அறிவியல் மற்றும் மனிதநேயத் துறையில் திட்ட உதவியாளர் பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 10.08.2025
Project Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: M.Sc. Degree in Mathematics / Applied Mathematics படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 25,000
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.annauniv.edu/pdf/CMRG_Recruitment_Project_Assistant_AURC_Coimbatore.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: Dr. S. Marshal Anthoni, Principal Investigator & Associate Professor of Mathematics, Department of Science and Humanities, Anna University Regional Campus, Coimbatore, Maruthamalai Main Road, Navavoor, Coimbatore – 641 046.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.08.2025
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழ்கண்ட அறிவிப்பைப் பார்வையிடவும்.