பொறியியல் மாணவர்கள் அவசியம் வளர்த்துக் கொள்ள வேண்டிய திறன்கள் என்ன? தொழில்துறை வேலை தேடுபவர்களிடம் எதிர்ப்பாக்கும் திறன்கள் என்ன என்பது குறித்து இப்போது பார்ப்போம்.
Advertisment
பொறியியலாளர் தினமான இன்று கல்வியாளர் சுரேஷ் சீதாராமன், இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டிய திறன் குறித்து யூடியூபில் வீடியோ வெளியிட்டுள்ளார். வீடியோவில் திறன்கள் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக மூத்த பேராசிரியர் ப்ரதீப் குமார் விளக்கம் அளித்துள்ளார்.
அந்த வீடியோவில், அண்ணா பல்கலைக்கழகத்தில் CAD/CAM சென்டர் 1996 முதல் ஜெர்மனியுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இதன் முக்கிய நோக்கம் தொழில்துறைக்கு திறன் வாய்ந்த பணியாளர்களை அளிப்பதாகும். இஸ்ரோ உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 30 ப்ராஜெக்ட்களை செய்து வருகிறோம். Ansys tool படித்தவர்களுக்கு தொழில்துறையில் தேவை அதிகமாக உள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் தொடங்கியுள்ள Ansys ஸ்கில் சர்டிபிகேஷன் புரோகிராம் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், படித்து முடித்தவர்கள், வேலை செய்பவர்கள் என அனைவருக்கும் உதவக் கூடியது. இது மாணவர்களுக்கு அடிப்படை அறிவை வழங்குவதோடு, தொழில் துறைக்கு தேவையான திறன் பணியாளர்களை வழங்கும் நோக்கம் கொண்டது. இந்த புரோகிராம் 72 மணி நேர கற்பித்தலை வழங்குகிறது. பின்னர் மாணவர்கள் குறைந்தபட்சம் 10க்கும் மேற்பட்ட ப்ராஜெக்ட்களில் பணிபுரிந்துக் கற்றுக்கொள்ள அறிவுறுப்படுகிறார்கள்.
இந்த சர்டிபிகேஷன் முடித்தவர்களுக்கு எலக்ட்ரிக் மற்றும் ஆட்டோமொபைல் வாகனங்கள் துறையில் நல்ல வேலை வாய்ப்பு காத்திருக்கிறது. குறைந்தபட்சம் ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“