Anna University Admission: சென்னை அண்ணா பல்கலைக்கழக இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், எம்.இ., - எம்.டெக்., எம்.சி.ஏ., - எம்.பி.ஏ., - எம்.ஆர்க்., - எம்.பிளான்., போன்ற படிப்புகளில் சேர, நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
மத்திய அரசின், 'கேட்' நுழைவுத் தேர்வு அல்லது தமிழக அரசின் பொது நுழைவு தேர்வான, 'டான்செட்' தேர்வு ஆகியவற்றில், ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றால், தமிழக முதுநிலை, இன்ஜி., கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம். இந்த ஆண்டுக்கான, டான்செட் தேர்வை தமிழக அரசு சார்பில், அண்ணா பல்கலை நடத்துகிறது.
தேர்வுக்கான ஆன்லைன் பதிவு, இன்று துவங்க உள்ளது. மே, 25 வரை, மாணவர்கள் பதிவு செய்யலாம். தற்போது, இறுதி செமஸ்டர் முடித்துள்ள, பி.இ., இன்ஜினியரிங் மாணவர்கள், இந்த தேர்வில் பங்கேற்கலாம்.டான்செட் தேர்வானது, எம்.சி.ஏ., - எம்.பி.ஏ., படிப்புகளுக்கு, ஜூன், 22லும், மற்ற படிப்புகளுக்கு, ஜூன், 23லும் நடத்தப்படுகிறது. தேர்வுக்கான விபரங்களை, www.annauniv.edu/tancet2018 என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.