scorecardresearch

அண்ணா பல்கலை. வேலை வாய்ப்பு; இன்ஜினியரிங் படித்தவர்கள் அப்ளை பண்ணுங்க!

அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

அண்ணா பல்கலை. வேலை வாய்ப்பு; இன்ஜினியரிங் படித்தவர்கள் அப்ளை பண்ணுங்க!

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை குரோம்பேட்டையில் உள்ள மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (எம்.ஐ.டி) வளாகத்தில் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 18.01.2023

இதையும் படியுங்கள்: அரசு மருத்துவமனை வேலை வாய்ப்பு; டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிங்க!

Professional Assistant – I

காலியிடங்களின் எண்ணிக்கை – 6

கல்வித் தகுதி : B.E. Computer Science and Engineering (OR) B.Tech. Information Technology படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : தினமும் ரூ. 821

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.annauniv.edu/pdf/PA-%20I%20@%20DCT.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : The Dean, Madras Institute of Technology Campus, Anna University, Chromepet, Chennai 600044

விண்ணப்பிக்க கடைசி தேதி : 18.01.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.annauniv.edu/pdf/PA-%20I%20@%20DCT.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Anna university mit campus recruitment 2023 application for assistants posts apply soon