அண்ணா பல்கலைகழகத்தில் பணிவாய்ப்பு : பி.இ., டிப்ளமோ பட்டதாரிகளே விரைவீர்..

ஒரு பணியிடத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்தால், எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்து எடுக்கப்படுவார்கள்.

Anna University Recruitment 2019: அண்ணா பல்கலைகழகத்தில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. பி.இ. எம்.சி.ஏ., டிப்ளமோ படித்த தகுதியுள்ள பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்

கிளார்க் – 1 பணியிடம்
புரொபஷனல் அசிஸ்டெண்ட் III – 8 பணியிடங்கள்
புரொபஷனல் அசிஸ்டெண்ட் I – 3 பணியிடங்கள்
புரொபஷனல் அசிஸ்டெண்ட் II- 10 பணியிடங்கள்

கல்வித்தகுதி

கிளார்க் பணியிடம் – கம்ப்யூட்டர் கையாளும் திறனுடன் கூடிய ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு
புரொபஷனல் அசிஸ்டெண்ட் III – அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிப்ளமோ படிப்பு
புரொபஷனல் அசிஸ்டெண்ட் II – எம்.சி.ஏ. அல்லது எம்.காம். அல்லது எம்.பி.ஏ அல்லது எம்.எஸ்சி.
புரொபஷனல் அசிஸ்டெண்ட் I – பி.இ., அல்லது பி.டெக்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : ஜூலை 1, 2019

சம்பளம்

நாள் ஒன்றுக்கு ரூ.296 முதல் ரூ.736 வரை
தகுதியுள்ள நபர்கள், தங்களது கல்விச்சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்களை ஜூலை 1ம் தேதி மாலை 5 மணிக்குள்

The Dean
Alagappa College of Technology
Anna University
Chennai 600 025

என்ற முகவரிக்கு கிடைக்குமாறு அனுப்பிவைக்க வேண்டும்.
ஒரு பணியிடத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்தால், எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்து எடுக்கப்படுவார்கள்.
எழுத்துத்தேர்வு தேதி, நேர்முகத்தேர்வு நாள், இடம் உள்ளிட்ட விபரங்கள், தகுதியானவர்களுக்கு இ-மெயில் அல்லது தொலைபேசி மூலம் அறிவிக்கப்படும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close