கொரோனா பெருந்தொற்று ஊரடங்கால் நாட்டில் கல்வி நிறுவனங்கள் தொடர்ச்சியாக மூடப்பட்டுள்ளன. இதனால், கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் (அதிலும், குறிப்பாக இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள்) தங்கள் செமஸ்டர் தேர்வுகளை எழுத முடியாத சூழலில் உள்ளனர்.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் தனது இறுதி ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகளை நடத்த முடிக்க தயாராகி வருகிறது. செயற்கை நுண்ணறிவு (AI) பென்பொருள் உதவியுடன் ஆன்லைன் தேர்வு நடத்தப்படும் என்றும், இதனால் குளறுபடுகள் பெருமளவில் தவிர்க்கப்படும் என்றும் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இறுதி ஆண்டு மாணவர்களின் தேர்வுகளை நடத்த வேண்டிய இக்காடான சூழலில் உள்ளோம். காலவரையின்றி தேர்வுகளை ஒத்திவைக்க முடியாது. எனவே, ஆன்லைன் தேர்வுகளை நடத்துவது பற்றி நாங்கள் தீவிரமாக பரிசீலித்து வருகிறோம்" என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம் கே சுரப்பா கூறினார்.
குறைந்தது 70% எண்ணிக்கையிலான மாணவர்கள் ஆன்லைனில் தேர்வுகள் எழுது கூடும் என்று பல்கலைக்கழகம் நம்புகிறது. ஆன்லைனில் தேர்வு எழுத முடியாத இதர 30% மாணவர்களுக்கு தேர்வு மையங்களில் தேர்வு நடத்தவும் அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டு வருகிறது.
ஆன்லைன் தேர்வுகளில் மாணவர்கள் தோல்வியடைந்தாலும், ஆஃப்லைன் பயன்முறையில் தேர்வுகளை எழுத அவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைக்கக்கூடும் என்றும் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
முன்னதாக, கல்லூரிகள் திறப்பது குறித்து
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு செயல்பட அனுமதிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.
கல்வி நிறுவனங்கள் மட்டத்தில் பெற்றோர் மற்றும் பிற தரப்பினருடன் ஆலோசனை நடத்துமாறு மாநில அரசுகள்/யூனியன் பிரதேச நிர்வாகங்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றன. இதில் பெறப்படும் கருத்துக்கள் அடிப்படையில், கல்வி நிறுவனங்களைத் திறக்க அனுமதிப்பது குறித்து ஜூலை 2020-இல் முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.