தமிழகத்தில் பொறியியல் மாணவர்களுக்கான இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு வகுப்புகள் பிப்ரவரி 18-ம் தேதி முதல் வகுப்புகள் நடைபெறும் என்றுஅண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்தது.
முன்னதாக, தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் திறப்பு குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில், " பிப்ரவரி 18-ம் தேதி முதல் மே 21-ம் தேதி வரை இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும். மே 24-ம் தேதி முதல் செய்முறைத் தேர்வுகள் தொடங்கும் என்றும், ஜூன் 2ல் எழுத்துத் தேர்வுகள் தொடங்கும் என்றும் தெரிவித்தது.
மேலும், இறுதி ஆண்டு மாணவர்களுக்கு வரும் பிப்ரவரி 14ம் தேதி முதல் ஏப்ரல் 12ம் தேதி வரை வகுப்புகள் நடைபெறும். ஏப்ரல் 15-ம் தேதி முதல் செய்முறைத் தேர்வுகள் தொடங்கும் எனவும், ஏப்ரல் 26-ம் தேதி அன்று எழுத்துத் தேர்வுகள் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெறுமா? (அ) வழக்கம் போல் ஆன்லைன் வழியாகவே வகுப்புகள் நடைபெறுமா? என்ற கேள்வியும் மாணவர்கள் மத்தியில் இருந்ததுவந்தது.
வாரத்துக்கு 6 நாட்கள் வேலை நாளாக கருத்தில் கொண்டு, வகுப்புகள் அரசின் உத்தரவின்படி ஆன்லைன் மூலம் நடத்தப்பட வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், பிப்ரவரி மாதத்துக்கான ஊரடங்கு கட்டுப்பாட்டு நெறிமுறைகள் தமிழக அரசு இந்த மாத இறுதியில் தான் வெளியிடும்.
கடந்த ஆண்டு டிசம்பர் 7ம் தேதி முதல், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, கலை, அறிவியல், தொழில்நுட்ப, பொறியியல், வேளாண்மை, மீன்வளம், கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள் / பல்கலைக் கழகங்களில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்தது.
ஏற்கனவே, தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil