விடைத் தாள் திருத்தும் பணியை டிஜிட்டல் ஆக்குகிறது அண்ணா பல்கலைக்கழகம்

இந்த முயற்சி நல்ல முறையில் செயல்படுத்தப்பட்டால், தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் இதை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்

By: Updated: November 6, 2019, 01:09:29 PM

சி.இ.ஜி, எம்.ஐ.டி, அழகப்பன் காலேஜ் ஆப் டெக்னாலஜி போன்றவைகள் தேர்வுத் தாளை திருத்தும் பணியை டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளது. தேர்வுத் தாள் திருத்தத்தில் நடைபெறும் முறைகேடுகளை தவிர்க்கும் ஒரு முயற்சியாக இது இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

டிஜிட்டல் முறை தேர்வுத் தாள் திருத்தம் ? எப்படி? 

தேர்வர்கள் எழுதிய தேர்வுத்தாளை ஒரு ஸ்கேன் இயந்திரம் மூலம் டிஜிட்டல் காப்பிகளாக மாற்றப்படுகின்றன. இந்த  ஸ்கேன் இயந்திரம் அதிக தொழில் நுட்பத்துடன் இயங்கும் என்று கருதப்படுகிறது. ஒரு நிமிடத்தில் 700 முதல் 1000 பக்கங்களை ஸ்கேன் எடுக்கும் வல்லமை பொருந்திய இயந்திரத்தை அண்ணா பலகலைக்கழகம் கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது.

ஒவ்வொரு டிஜிட்டல்  காப்பிகளுக்கும் தேர்வர்களின் அடையாளமாக  டம்மி நம்பர் கொடுக்கப்படும். இந்த டிஜிட்டல் காப்பித்தான் இனித் திருத்தப்படும். ஒரு டிஜிட்டல் ஸ்க்ரீனில் தான் இனி ஆசிரயர்கள் திருத்துவார்கள்.  இதற்கென விஷேச பென்போருளை  டிஜிட்டல் ஸ்க்ரீனில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.

யாரும் பாதிக்காத வகையில் இருப்பதற்காக ஆசிரியர்கள் திருத்தும்போது திருத்தப்படும் தேர்வர்களின் பெயர், தேர்வு எண் போன்ற எதுவும் தெரியாது அந்த டம்மி நம்பரைத் தவிர.  இந்த முயற்சி நல்ல முறையில் செயல்படுத்தப்பட்டால், தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் இதை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Education-jobs News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Anna university paper evaluation anna university fool proof method for paper correction

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X