Advertisment

இனி பிராக்டிகலுக்கு 40 மார்க்: தமிழக பொறியியல் தேர்வுகளில் முக்கிய மாற்றம்

அண்ணா பல்கலைக்கழகம், பல்கலைக்கழகத்துடன் இணைந்த கல்லூரிகள், தன்னாட்சி கல்லூரிகள், பல்கலைக்கழகத் துறைகள் உட்பட அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் செமஸ்டர் தேர்விலும் அகமதிப்பீடு தேர்விலும் (துறை அளவிலான தேர்வுகள் ஒரே மாதிரியாக 60%: 40% மதிப்பெண்ணை அண்ணா பல்கலைக்கழகம் முன்மொழிந்துள்ளது.

author-image
WebDesk
New Update
Anna university, Anna university exam, Anna university new syllabus, Anna university exam new pattern, அண்ண பல்கலைக்கழகம், அண்ணா பல்கலை, பொறியியல் படிப்பு, 40 சதவீதம் மதிப்பெண் பிராக்டிகல், பொறியியல் கல்வி, Tamil nadu engineering examination, tn engineering exam new pattern, Tamil nadu engineering exam internal marks

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் பல்கலைக்கழகத்துடன் இணைந்த கல்லூரிகள், தன்னாட்சி கல்லூரிகள், பல்கலைக்கழகத் துறைகள் உட்பட அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் செமஸ்டர் தேர்விலும் அகமதிப்பீடு தேர்விலும் (துறை அளவிலான தேர்வுகள் ஒரே மாதிரியாக 60%: 40% மதிப்பெண் அமைக்க அண்ணா பல்கலைக்கழகம் முன்மொழிந்துள்ளது.

Advertisment

எழுத்துத் தேர்வு மற்றும் அகமதிப்பீடு தேர்வுகள் இரண்டும் தலா 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். இப்போது, அண்ணா பல்கலைக்கழகம் எழுத்துத் தேர்வுகளில் விண்ணப்பதாரரின் மதிப்பெண்ணை 60 மதிப்பெண்களாகவும், அகமதிப்பீடு மதிப்பெண் 40 மதிப்பெண்களாகவும் மாற்றப்படும் என்று பரிந்துரைத்துள்ளது. எழுத்துத் தேர்வு மற்றும் அகமதிப்பீடு தேர்வுகள் இரண்டுமே பாடத்தில் விண்ணப்பதாரரின் இறுதி மதிப்பெண்ணாக இருக்கும்.

தற்போது, அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்த கல்லூரிகளில் ஒரு பாடத்தில் 80% : 20% மதிப்பெண் முறையில், எழுத்து தேர்வு மற்றும் அகமதிப்பீடு மதிப்பெண்கள் என அமைந்துள்ளன. அதே நேரத்தில் தன்னாட்சி கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக துறைகள் 60%: 40% மற்றும் செமஸ்டர் தேர்வுகளுக்கு 50% மதிப்பெண் மற்றும் அகமதிப்பீடு தேர்வுகளுக்கு 50% என மதிப்பெண் அமைக்கப்பட்டது.

கடந்த வாரம் நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழகம் கல்விக் கவுன்சில் கூட்டத்தில் முன்மொழியப்பட்டபடி, அனைத்து பொறியியல் படிப்புகளிலும் எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறை தாள்களுக்கு 60%: 40% வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்க பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. எழுத்து மற்றும் செய்முறை தேர்வுகளைக் கொண்ட தாள்களில் புறத் தேர்வி மற்றும் அகமதிப்பீடு தேர்வுகளுக்கு 50%: 50% மதிப்பெண் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழகத்துடன் இணைந்த கல்லூரிகளில் தேர்ச்சி சதவீதம் குறைவாக இருப்பதை காரணம் காட்டி, தமிழகத்தில் உள்ள சுயநிதி தொழில் நுடப கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் கூட்டமைப்பு அனைத்து கல்லூரிகளுக்கும் புறத் தேர்வு மற்றும் அகமதிப்பீடு தேர்வுகளுக்கு ஒரே மாதிரியான மதிப்பெண் வெயிட்டேஜை பின்பற்றுமாறு மாநில அரசுக்கு மனு அளித்துள்ளது.

இது குறித்து அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் ஊடகங்களில் கூறுகையில், ​​அனைத்து கல்லூரிகளுக்கும் சீரான விகிதம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றார். அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள், தனியார் கல்லூரிகளில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க மட்டுமே இந்த திட்டம் உதவும் என்றும், மேலும், அவர்களின் மாணவர் சேர்க்கைக்கு உதவும் என்றும் தெரிவித்தனர்.

“தரத்தை மேம்படுத்த பல்கலைக்கழகம் தொடர்ச்சியான மதிப்பீடு மற்றும் செமஸ்டர் தேர்வுகளை வலுப்படுத்த வேண்டும். வெயிட்டேஜ் சீரான தரத்தை மேம்படுத்தும் திசையில் சரியான நடவடிக்கை அல்ல” என்று ஒரு தன்னாட்சி கல்லூரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த கல்விக் கவுன்சில் கூட்டத்தில் 2021-22 முதல் 400க்கும் மேற்பட்ட இணை கல்லூரிகளுக்கு புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்த பல்கலைக்கழகம் முன்மொழிந்தது. புதிய விதிமுறைகளின் கீழ், BE/BTech பட்டப்படிப்பு AICTE மாதிரி பாடத்திட்டத்தின்படி 185 கிரிடிட்ஸ்களில் இருந்து 160 கிரிடிட்ஸ்களாக குறைக்கப்பட்டுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamil Nadu Anna University
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment