scorecardresearch

அண்ணா பல்கலை. வேலை வாய்ப்பு; டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் அப்ளை பண்ணுங்க!

அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

அண்ணா பல்கலை. வேலை வாய்ப்பு; டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் அப்ளை பண்ணுங்க!

அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் உதவியாளர், எழுத்தர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 10 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 06.01.2023

இதையும் படியுங்கள்: கோவை மாவட்ட வேலை வாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Professional Assistant – II

காலியிடங்களின் எண்ணிக்கை – 4

கல்வித் தகுதி : M.C.A / M.B.A/ M.Com / M.Sc படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : தினமும் ரூ. 771

Professional Assistant – III

காலியிடங்களின் எண்ணிக்கை – 1

கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு பிரிவில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : தினமும் ரூ. 699

Clerical Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை – 3

கல்வித் தகுதி : இளங்கலைப் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : தினமும் ரூ. 486

Application Programmer (Junior)

காலியிடங்களின் எண்ணிக்கை – 1

கல்வித் தகுதி : B.E / B.Tech /MCA / MSC (CSE/IT/Software Engg.) படித்திருக்க வேண்டும். மேலும் 2 வருடம் பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் : ரூ. 25,000- 30,000

Application Programmer (Senior)

காலியிடங்களின் எண்ணிக்கை – 1

கல்வித் தகுதி : B.E / M.E / MCA / MSC (CSE/IT/Software Engg.)  படித்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் : ரூ. 30,000 – 40,000  

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.annauniv.edu/pdf/Recruitment-notification-2023.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : The Director, Centre for Research, Anna University, Chennai- 600 025

விண்ணப்பிக்க கடைசி தேதி : 06.01.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.annauniv.edu/pdf/Recruitment-notification-2023.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Anna university recruitment 2022 application for assistants posts apply soon

Best of Express