அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை கிண்டியில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரி வளாகத்தில் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 08.02.2023
இதையும் படியுங்கள்: திருச்சி என்.ஐ.டி வேலை வாய்ப்பு; 12-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
Professional Assistant – I
காலியிடங்களின் எண்ணிக்கை – 1
கல்வித் தகுதி : B.E. Computer Science and Engineering (OR) B.Tech. Information Technology படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : தினமும் ரூ. 821
Peon
காலியிடங்களின் எண்ணிக்கை – 1
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : தினமும் ரூ. 424
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.annauniv.edu/pdf/call_for_engagement.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி : Dr. V. Mary Anita Rajam Professor & Director, Centre for Cyber Security, Department of CSE, CEG Campus, Anna University, Chennai-600 025.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 08.02.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.annauniv.edu/pdf/call_for_engagement.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil