அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை கிண்டியில் உள்ள சுகாதாரக் கருவிகள் மேம்பாட்டிற்கான தேசிய மையத்தில் சிறப்பு அலுவலர் மற்றும் வணிகத் தொடர்பு அலுவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 30.03.2023
இதையும் படியுங்கள்: EPFO நிறுவனத்தில் 2859 பணியிடங்கள்; 12-ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிங்க!
Special Officer
காலியிடங்களின் எண்ணிக்கை – 1
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் மற்றும் MBA படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம் : ரூ. 40,000 – 50,000
Business Liaison Officer
காலியிடங்களின் எண்ணிக்கை – 1
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் மற்றும் MBA படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம் : ரூ. 40,000 – 50,000
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.annauniv.edu/pdf/NHHID%20Advertisement.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி : The Coordinator, NHHID, Kalanjiyam Building, 2nd Floor, Opposite Mining Engineering, CEG Campus, Anna University, Chennai-600 025.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.03.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.annauniv.edu/pdf/NHHID%20Advertisement.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.