Advertisment

அண்ணா பல்கலை. வேலை வாய்ப்பு; 8-ம் வகுப்பு, பி.இ படித்தவர்கள் அப்ளை பண்ணுங்க!

அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; 8 ஆம் வகுப்பு, என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
New Update
anna university

அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள பொறியியல் படிப்புகளுக்கான தமிழ் மேம்பாட்டு மையத்தில் உதவியாளர் மற்றும் ப்யூன் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 26.12.2023

Advertisment

Professional Assistant I / II

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி : B.E/B.Tech (CSE/IT) or M.Sc (CSE/IT) படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 01.12.2023 அன்று 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : நாள் ஒன்றுக்கு ரூ. 819 - 872

Peon

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : நாள் ஒன்றுக்கு ரூ. 471

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.annauniv.edu/pdf/CDTET-recruitment-Advrtmnt-Dec2023.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்

முகவரி: Dr.P.Uma Maheswari, Professor & Director, Centre for Development of Tamil in Engg. & Tech. Hall No. 310 &, Centre for Excellence Building Anna University, Chennai – 600 025

விண்ணப்பிக்க கடைசி தேதி : 26.12.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.annauniv.edu/pdf/CDTET-recruitment-Advrtmnt-Dec2023.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Anna University Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment