அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள தொலைதூர கல்வி மையத்தில் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 06.11.2023
Professional Assistant I
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி : B.E/ B.Tech படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : நாள் ஒன்றுக்கு ரூ. 872
Professional Assistant II
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி : M.C.A / M.Sc / MBA / M.Com படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : நாள் ஒன்றுக்கு ரூ. 819
Application Programmer
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி : B.E (ICE/Electrical)/MC A/MSC(CSE/IT/Software Engineer) படித்திருக்க வேண்டும். 2 வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம் : ரூ. 25,000
Clerical Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் : நாள் ஒன்றுக்கு ரூ. 629
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://annauniv.edu/pdf/Advertisement%20for%20the%20posts%20of%20App%20P,PA%20&%20CA.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்
முகவரி: The Director, Centre for Distance Education, Anna University, Chennai - 600 025
விண்ணப்பிக்க கடைசி தேதி : 06.11.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://annauniv.edu/pdf/Advertisement%20for%20the%20posts%20of%20App%20P,PA%20&%20CA.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“