அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை கிண்டியில் உள்ள ஸ்பான்சர்டு ஆராய்ச்சி மற்றும் ஆலோசனைக்கான மையத்தில் (CENTRE FOR SPONSORED RESEARCH AND CONSULTANCY) திட்ட உதவியாளர் மற்றும் திட்ட இணை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 12.06.2023
இதையும் படியுங்கள்: ICF Jobs; சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் 782 பணியிடங்கள்; 10th, ITI முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு
Project Associate - I
காலியிடங்களின் எண்ணிக்கை: 3
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் M.Sc (Computer Science / Information Technology) / MCA படித்திருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 20,000 – 35,000
Project Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 3
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 12,000 – 24,000
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க http://ctdt.annauniv.edu/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: Director, Centre for Sponsored Research and Consultancy, Anna University, Chennai 600025
விண்ணப்பிக்க கடைசி தேதி : 12.06.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://annauniv.edu/pdf/staff_recruitment_for_RCC_revised_31052023.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.