அண்ணா பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் மின்சார வாகன சார்ஜிங் மையத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 18.10.2023
Technical Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி : B.E/ B.Tech in Electrical and Electronics Engineering/ Electrical Engineering with M.E/ M.Tech in Power System Engineering/ Power Electronics and Drives படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ஒரு மணிநேரத்திற்கு ரூ. 300
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://annauniv.edu/pdf/SMP_Recruitment.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்
முகவரி: Dr. V.Gomathi, Team Director, P01, RUSA 2.0 Project, Department Electrical and Electronics Engineering, Anna University, Chennai – 25.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 18.10.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://annauniv.edu/pdf/SMP_Recruitment.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“