அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள மின்சார வாகன மேம்பாட்டு மையத்தில் இளநிலை ஆராய்ச்சியாளர், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 15.04.2024
Junior Research Fellow (JRF)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி : B.E/B.Tech in Electrical and Electronics Engineering / Electrical Engineering. மற்றும் M.E/M.Tech in Power Electronics and Drives / Electrical Drives and Control / Control and Instrumentation Engineering. படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 32,500
Technical Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி : B.E/B.Tech in Electrical and Electronics Engineering / Electrical Engineering. படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 200 (ஒரு மணி நேரத்திற்கு)
Skilled Lab Assistant – II
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி : Diploma in Electrical and Electronics Engineering / Electrical Engineering. படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 150 (ஒரு மணி நேரத்திற்கு)
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.annauniv.edu/pdf/APPLICATION_FOR_OF_JRF_TA_SLA.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: The Head of the Department, Department of Electrical and Electronics Engineering, Anna University, Chennai-25.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.04.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.annauniv.edu/pdf/APPLICATION_FOR_OF_JRF_TA_SLA.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“