/indian-express-tamil/media/media_files/2024/12/25/Q8J6mtwpnrVYNecnezjE.jpg)
அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் திட்ட உதவியாளர் பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 10.01.2025
Project Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: B.E. / M.E. (Mechanical / Thermal Engineering) படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 25,000
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.annauniv.edu/pdf/Advertisement_Project_Assistant_CMRG_Mech.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மின்னஞ்சல் முகவரி: p_balachander@annauniv.edu
பின்னர் விண்ணப்பம் மற்றம் ஆவணங்களை கீழ்கண்ட முகவரிக்கு தபாலில் அனுப்ப வேண்டும்.
முகவரி: The Head of the Department, Department of Mechanical Engineering, College of Engineering, Guindy Campus, Anna University, Chennai - 600 025.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.01.2025
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.