சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மேனேஜர், சர்வேயர், திட்ட உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 9 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 07.02.2025
Environmental and Safety Officer
காலியிடங்களின் எண்ணிக்கை: 3
கல்வித் தகுதி: Diploma in Industrial Safety படித்திருக்க வேண்டும். 10 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
சம்பளம்: ரூ. 41,000
ESHS Manager
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: Post Graduate in Environmental Science/ Environmental Engineering/ Environmental Management/ Social Work/ Sociology படித்திருக்க வேண்டும். ஒரு ஆண்டு பணி அனுபவம் அவசியம்.
சம்பளம்: ரூ. 45,000
Surveyor
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: B.E./ B.Tech in Civil Engineering படித்திருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
சம்பளம்: ரூ. 30,000
Project Associate - II
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: M.E./ M.Tech (Environmental Science/ Environmental Engineering/ Environmental Management) படித்திருக்க வேண்டும். ஒரு ஆண்டு பணி அனுபவம் அவசியம்.
சம்பளம்: ரூ. 42,000
Project Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: B.A (Eng Lit.,)/ B.Sc (Comp Sci)/ BBA/ B.Com படித்திருக்க வேண்டும். ஒரு ஆண்டு பணி அனுபவம் அவசியம்.
சம்பளம்: ரூ. 24,000
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: The Professor and Director, Centre for Environmental Studies, Anna University, Chennai - 600 025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.02.2025
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழ்கண்ட அறிவிப்பைப் பார்வையிடவும்.