Anna University release Engineering colleges pass percentage check here: தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு வருகின்ற ஆகஸ்ட் 20 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், மாணவர்கள் கல்லூரிகளை தேர்வு செய்வதற்காக, அண்ணா பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வு முடிவுகள் மற்றும் கல்லூரியின் தேர்ச்சி சதவீதம் எவ்வளவு? என்பது போன்ற விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர வருகின்ற 20 ஆம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்க உள்ளது. மொத்தம் 1.69லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்தாய்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
இதையும் படியுங்கள்: TNEA Counselling: உங்க Cut Off -க்கு எந்த ரவுண்ட் கவுன்சலிங்?
இந்தநிலையில், என்ஜினீயரிங் கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்காக, அண்ணா பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வு முடிவுகள் மற்றும் கல்லூரியின் தேர்ச்சி சதவீதம் எவ்வளவு? என்பது போன்ற விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மொத்தம் 408 கல்லூரிகளுக்கான தேர்ச்சி விகிதம் வெளியிடப்பட்டுள்ளது. கல்லூரிகளின் குறியீட்டு எண் உடன் தேர்ச்சி விகித பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த விவரங்களை மாணவர்கள் நேரடியாக https://www.tneaonline.org என்ற இணையதளத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
கல்லூரிகளின் தேர்ச்சி விகிதத்தைப் பொறுத்தவரை, 100 சதவீத தேர்ச்சி விகிதத்தில் 16 கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன. 99 முதல் 99.93 சதவீதத்தில் 60 கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன. 98.01 முதல் 98.98 சதவீத தேர்ச்சி விகிதத்தில் 61 கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன. 97 முதல் 97.98 சதவீத தேர்ச்சி விகிதத்தில் 36 கல்லூரிகள் உள்ளன.
ஒட்டுமொத்தமாக 234 கல்லூரிகள் 95 சதவீத தேர்ச்சி விகிதத்தைப் பெற்றுள்ளன. 90 முதல் 95 சதவீத தேர்ச்சி விகிதத்தில் 78 கல்லூரிகள் உள்ளன.
மொத்தம் உள்ள 408 கல்லூரிகளில் 359 கல்லூரிகள் 80 சதவீத தேர்ச்சி விகிதத்தை வைத்துள்ளன. அதேநேரம் 404 கல்லூரிகள் 50 சதவீத தேர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ளன. நான்கு கல்லூரிகள் மட்டுமே 50 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil