TANCA rank list 2019: சென்னை அண்ணா பல்கலைக்கழகம் தமிழ்நாடு காமன் அட்மிஷன் (டான்கா) தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. எம்.இ, எம்டெக், எம்.ஆர்ச் மற்றும் எம்.பிளான் போன்ற படிப்புகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் பிற அரசு சார்ந்த நிறுவனங்களில் மாணவர்கள் சேர்வதற்காக நடைபெறும் கவுன்சிலிங் தான் இந்த காமன் அட்மிச்சன் (டான்கா). அதற்கான விண்ணப்ப செயல்முறை ஜூலை 24 அன்று தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
கேட் அல்லது டான்செட் 2019 தேர்வில் ஒரு வேட்பாளர் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் இந்த டான்கா தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அட்டவணையின்படி, கேட் மற்றும் டான்செட் தேர்வெழுதிய மாற்றுத்திறனாளி வேட்பாளர்களுக்கான கவுன்சிலிங் செயல்முறை ஆகஸ்ட் 27 ஆம் தேதி நடைபெறும். டான்செட் பிரிவில் உள்ள மற்ற தேர்வர்களுக்கு கவுன்சிலிங் ஆகஸ்ட் 28 முதல் ஆகஸ்ட் 30 வரை நடத்தப்படும். எஸ்சிஏ முதல் எஸ்சி கவுன்சிலிங் ஆகஸ்ட் 30, 2019 அன்று (பிற்பகல்) நடத்தப்பட்டது.
முக்கிய விவரங்களுக்கு இங்கே செல்லவும் :
https://tanca.annauniv.edu/tanca19/pdf/TANCA_2019_Schedule.pdf
கவுன்சிலிங் நேரத்தில், சீட்டை தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் ரூ .5,300 (தமிழ்நாட்டைச் சேர்ந்த எஸ்சி / எஸ்சிஏ / எஸ்டி வேட்பாளர்களுக்கு ரூ .1,150) செலுத்த வேண்டும்.
மாணவர்கள் தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் பிற ஆவணங்களை எடுத்துச் சென்று கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள வேண்டும். “செயலாளர், டான்கா, அண்ணா பல்கலைக்கழகம்” சென்னை என்ற முகவரிக்கு டிமான்ட் டிராப்ட் எடுக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இந்த கவுன்சிலிங்கில் மாணவர்கள் தேர்வில்(கேட் அல்லது டான்செட்) குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களை பெற வேண்டும், ரிசரிவ்டு பிரிவு வேட்பாளர்களுக்கு இது 45 சதவீதம். டான்கா பட்டியல் 300 க்கும் மேற்பட்ட கல்லூரிகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.