அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
பொறியியல் படிப்புகளை தமிழ் வழியில் கற்பிக்கும் வகையில், அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் தமிழ் வழி கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் சிவில் மற்றும் மெக்கானிக்கல் படிப்புகள் தமிழ் வழியில் கற்பிக்கப்பட்டன.
இதையும் படியுங்கள்: எதிர்காலத்தில் எந்தப் படிப்புக்கு வேலை? தேர்வு செய்வது எப்படி? கல்வியாளர் ரமேஷ்பிரபா விளக்கம்
இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் தமிழ் பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அண்ணா பல்கலைக்கழகத்தின் 11 உறுப்பு கல்லூரிகளில் தமிழ் மொழியில் கற்பிக்கப்பட்டு வரும் மெக்கானிக்கல் மற்றும் சிவில் பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுகின்றன. இந்த நீக்கம் வரும் கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இந்தப் பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை இல்லாததன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும் 6 உறுப்பு கல்லூரிகளில் ஆங்கில வழி சிவில் மற்றும் மெக்கானிக்கல் பாடப்பிரிவுகளும் மூடப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
உயர்கல்வி படிப்புகளை தமிழ் வழியில் கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் கல்வித் துறை தெரிவித்துள்ள நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 20% இடஒதுக்கீடு உள்ள நிலையிலும், இந்த படிப்புகளில் போதிய மாணவர் சேர்க்கை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil