கொரோனா வைரஸ் பெருந்தோற்று சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, அண்ணாப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் ஏப்ரல்-மே மாதங்களில் நடத்தப்படும் இறுதி செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் லாக்டவுன் முடிந்த பின்னர் நடத்தப்படும் என்று அறிவித்தது.
பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ சுற்றறிக்கையில்,"2020 ஆம் ஆண்டு ஏப்ரல்/ மே இறுதி செமஸ்டர் தேர்வுகளுகக்ன திருத்தப்பட்ட கால அட்டவணை, பொது முடக்க நிலை முழுவதும் விடிவிக்கப்பட்ட பின்னர் புதிதாக வெளியிடப்படும்" என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
டிரம்ப் இப்போ பேசுகிறார்: இந்தியா ஓசையின்றி ஒதுக்கி வைத்த WHO ஆலோசனைகள்
மேலும், படிப்புக் காலம் முடிந்தவர்களுக்காக நடத்தப்படும் சிறப்பு தேர்வுகளுக்கான அட்டவனனையும் முடக்க நிலை தளர்வுக்கு பின் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பெருந்த்தொற்று பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு வரும் ஏப்ரல் 15ம் தேதி பொது முடக்கத்தை அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முடக்க நிலை நீட்டிப்பது தொடர்பான முடிவெடுப்பதற்காக வரும் ஏப்ரல் 11ம் தேதி நடைபெறும் பிரதமர் நரேந்தர மோடி தலைமியில் மாநில முதல்வர்கள் கலந்து கொள்ளும் காணொலி மாநாட்டில் முக்கிய முடிவெடுக்கப்படும் என்று நம்பப்பப்டுகிறது