பொறியியல் மாணவர்களுக்கான நடப்பு செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்தது.
இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் டிசம்பர் 14ம் தேதி தொடங்குகிறது. இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் முடிந்த பின்னரே மற்ற பிரிவு மாணவர்களுக்கான தேர்வுகள் தொடங்கும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது.
கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து மூடப்பட்டன.
இறுதி ஆண்டு பருவத் தேர்வு தவிர, பல்கலைக்கழகங்கள், கலை, அறிவியல் கல்லூரிகளின் அரியர்ஸ் தேர்வுகள், தொழில்நுட்பக் கல்லூரிகளின் அரியர்ஸ் தேர்வுகளை முதல்வர் பழனிசாமி முன்னதாக ரத்து செய்தார். மேலும், அரியர்ஸ் தேர்வு எழுத தேர்வுக் கட்டணம் செலுத்திய அனைத்து அரியர்ஸ் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தார்.
மேலும்,நடப்பு கல்வி ஆண்டுக்கான வகுப்புகளும் இணையவழியில் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், வரும் 7ம் தேதி முதல் இறுதியாண்டு
இளங்கலை,மாணவர்களுக்காக கல்லூரிகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இதற்கான, வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு இன்று வெளியிட்டது. மாணவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும், சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த வேண்டும், ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்த வேண்டும் போன்ற வழிமுறைகள் அதில் தெரிவிக்கப்பட்டன.
கடந்த டிசம்பர் 2ம் தேதி முதல், முதுநிலை இறுதியாண்டு மற்றும் ஆராய்ச்சிப் படிப்பு மாணவா்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
அண்ணா பல்கலைக்கழகம் தற்போது இறுதி ஆண்டு மாணவர்கள் தவிர்த்து, மற்ற பிரிவினருக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.