அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு விபரங்கள் வெளியீடு – ஆல் தி பெஸ்ட் ஸ்டூடண்ட்ஸ்…

Anna university : இளங்கலை மற்றும் முதுகலை இஞ்ஜினியரிங் மாணவர்களுக்கான 2019 நவம்பர் / டிசம்பர் செமஸ்டர் தேர்வு அட்டவணை, அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

By: September 6, 2019, 1:05:59 PM

அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்போது படித்து வரும் இளங்கலை மற்றும் முதுகலை இஞ்ஜினியரிங் மாணவர்களுக்கான 2019 நவம்பர் / டிசம்பர் செமஸ்டர் தேர்வு அட்டவணை, அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இளங்கலை மற்றும் முதுகலை இஞ்ஜினியரிங் மாணவர்களுக்கான நவம்பர் / டிசம்பர் செமஸ்டர் தேர்வு அட்டவணை மட்டுமல்லாது, CEG வளாகத்தில் நடைபெறும் இளங்கலை இஞ்ஜினியரிங் பிரிவு மாணவர்களுக்கான துணைத்தேர்வு மற்றும் AC TECH வளாகத்தில் நடைபெறும் இளங்கலை இஞ்ஜினியரிங் பிரிவு மாணவர்களுக்கான துணைத்தேர்வுகளுக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.

நவம்பர் / டிசம்பர் 2019 (UG, PG)
செய்முறை மற்றும் எழுத்துத்தேர்வு – அக்டோபர் 21, 2019 முதல் டிசம்பர் 10, 2019 வரை

UG Supplementary Exam Time Table for CEG Campus – செப்டம்பர் 12 முதல் 18ம் தேதி வரை

UG Supplementary Exam Time Table for AC TECH Campus: – செப்டம்பர் 12 முதல் 17ம் தேதி வரை

மாணவர்கள் தேர்வு அட்டவணை குறித்த கூடுதல் தகவல்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை (https://annauniv.edu/ ) பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

Web Title:Anna university semester examination november

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X