அண்ணா பல்கலைகழக கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்படுவதாக உயர்கல்வி அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைழக்கம் மற்றும் அத்துடன் இணைக்கப்பட்டுள்ள பொறியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் தேர்வுக் கட்டணம், பட்டச் சான்றிதழ் கட்டணம், ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் கட்டணம் ஆகியவற்றை 50 % வரை உயர்த்தி அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்லது.
தமிழகத்தில் அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் உள்ள 440-க்கும் மேற்பட்ட பொறியல் கல்லூரிகள் செய்லபட்டு வருகின்றன. அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகள் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆண்டுதோறும் அண்ணா பல்கலைக்கழகத்தால் மாணவர் சேர்க்கைகளுக்கு ஆண்டுதோறும் அண்ணா பல்கலைகழகத்தால் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுக்கட்டணம் 50% வரை உயர்த்தப்பட்டு உள்ளது. தன்னாட்சி பெறாத கல்லூரிகளில் செம்ஸ்டர் தேர்வுக் கட்டணம் , இளநிலை பட்டங்களுக்கு ஒரு பாடத்திற்கு ரூபாய் 150-ல் இருந்து ரூபாய் 225 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இளநிலை புராஜெக்ட் ஓர்க்கட்டணம் ரூ.300ல் இருந்து 450 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பொறியியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டங்களுக்கு ஒரு பாடத்திற்கு தேர்வு கட்டணம் 450ல் இருந்து ரூ.670 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பொறியியல் கல்லூரிகளில் பட்டப்படிப்பு சான்றிதழ், ஒரு கிணைந்த மதிப்பெண் பட்டியல் கட்டணமும் ரூ.1000ல் இருந்து ரூபாய் 1500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
சான்றிதழ்களை டிஜிலாக்கரில் பதிவேற்றம் செய்வதற்கான கட்டணமும் ரூ.1000 லிருந்து ரூ.1500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தன்னாட்சி பெற்ற கல்லூரிகள் பட்டப்படிப்பு சான்றிதழ், ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் கட்டணமும் ரூ.1000ல் இருந்து ரூபாய் 1500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இந்த கட்டணங்கள் அனைத்தும் இனிமே ஆண்டுதோறும் 5 % அளவுக்கு உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டணம் எதிர்வரும் நவம்பர் – டிசம்பர் செமஸ்டர் தேர்வில் இருந்து நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதற்கு மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவிய நிலையில் அண்ணா பல்கலைகழக கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்படுவதாக உயர்கல்வி அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“