அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீதான விசாரணைக் குழு அறிக்கை மீது இறுதி முடிவு எடுக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீதான நிதி முறைகேடு புகார் தொடர்பாக, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரனை நடத்த தமிழக அரசு விசாரணைக் குழு அமைத்தது.
இதற்கிடையே, தமக்கு எதிராக விசாரணைக் குழு அமைத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்றும், விசாரணை ஆணையத்துக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்றும் துணைவேந்தர் சூரப்பா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்
"அரியர் தேர்வுகளை நடத்தாமல் முடிவுகளை வெளியிடும் தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் பழிவாங்கும் வாங்கும் நடவடிக்கையாக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டதாக" சூரப்பா தனது மனுவில் குறிப்பில் குறிப்பிட்டார்.
மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தின் தன்னாட்சி அந்தஸ்து குறித்து மத்திய அரசுக்கு நேரடியாக கடிதம் எழுதியதை சுட்டிக்காட்டிய சூரப்பா, இந்த விவகாரம் தேவையற்ற வகையில் சர்ச்சைக்குள்ளக்கப்பட்டதாகவும் , ஆளும் கட்சி தரப்பில் தனது முயற்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.
இன்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் சூரப்பா மனு மீதான விசாரணை எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது சூரப்பா மீதான விசாரணை அறிக்கை மீது எந்த இறுதி முடிவும் எடுக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னதாக, அண்ணா பல்கலைக்கழகம் துணை வேந்தர் சூரப்பா மீதான புகார்களில் முகாந்திரம் உள்ளது என்று கலையரசன் குழு அறிவித்தது. சூரப்பா நேர்மையானவர் என்று பல்கலைக்கழக பேராசிரியர்கள் கூறுவதில் உண்மை இல்லை. தேவையான ஆதாரங்கள் கிடைத்துள்ளதால் சூரப்பாவிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தது.
விசாரணை ஆணையம் தொடர்பாக உத்தரவில்," சூரப்பாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தீவிரமானவை" என்று தமிழக அரசு தெரிவித்தது.
துணை வேந்தர் சூரப்பாவின் நிர்வாக காலத்தில், பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் நிர்வாகத் தரப்பில் செய்யப்பட்ட தற்காலிக நியமனங்கள் மற்றும் பிற ஆட்சேர்ப்புகளையும் நீதிபதி கலையரசன் விசாரணை குழு விசாரிக்கும். கட்டணம், உதவி, நன்கொடைகள், மானியங்கள் போன்றவற்றில் அவர் தனது நிர்வாகக் காலத்தில் பெறப்பட்ட தொகைகள் குறித்தும் விசாரிக்கும்.
அவரது நிர்வாகக் காலத்தில் பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய எந்தவொரு நபரின் தரப்பிலும் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டதா அல்லது உத்தியோகபூர்வ பதவியை துஷ்பிரயோகம் செய்ததா என்பதையும் விசாரணைக் குழு விசாரிக்கும். இதுபோன்ற குற்றச்சாட்டுகள் உண்மை என நிரூபிக்கப்பட்டால், எதிர்காலத்தில் இதுபோன்ற மறுபடியும் ஏற்படுவதைத் தடுக்க இதுபோன்ற பொருத்தமான வழிகளையும் வழிகளையும் பரிந்துரைக்க வேண்டும் என தமிழக அரசின் உத்தரவில் தெரிவித்தது.