எம்.இ, எம்டெக், எம்.ஆர்ச் மற்றும் எம்.பிளான் போன்ற முதுநிலை படிப்புகளுக்கு நடத்தப்படும் தமிழ்நாடு பொது சேர்க்கைக்கான ஆலோசனை இந்த வாரம் நடைபெற்றது.
இதில் மாநிலத்தில் மொத்தமாய் உள்ள 15,574 இடங்களில் 12,801 இடங்கள் நிரப்படாமல் இருந்துள்ளது. ஏன்... மிகவும் பிரபலமான சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் மொத்தம் உள்ள 2,198 இடங்களில், 895 இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தன.
சில நாட்களுக்கு முன்பு பி.இ படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கை மந்தமாய் இருந்த செய்தியை நாம் கடந்து வந்திருப்போம். அதே சூழ்நிலையில் தான் இன்று முதுநிலை படிப்புகளும் உள்ளன. இது தமிழகத்தில் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிலும் இதே நிலை தான்.
முதுநிலை படிப்பிற்கு பின் மாணவர்கள் பொதுவாக விரிவுரையாளர்கள் பணிக்கு ஆர்வப்படுவார்கள். ஆனால், விரிவுரையாளர்கள் நியமிப்பு குறைக்கப் பட்டதால் இப்படிப்புகளில் சேரும் மாணவர்களின் ஆர்வமும் குறைந்துள்ளதாக கருதப்படுகிறது.
வேலை வாய்ப்பு, கல்வி முறை, கல்வி கட்டமைப்பு போன்றவைகளில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்பது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது.