Tamil nadu engineering colleges admission: தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு நிறைவடைந்த நிலையில், வெறும் 42,421 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன.
தமிழகத்தில், 458 கல்லூரிகளில் உள்ள ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 877 இடங்கள் பொதுப்பிரிவு கலந்தாய்வு கடந்த அக்டோபர் 8ம் தேதி தொடங்கியது. இம்மாதம் 28-ஆம் தேதிவரை, நான்கு கட்டங்களாக கலந்தாய்வு நடைபெறுகிறது. மூன்றாம் கட்ட கலந்தாய்வு முடிவுற்ற நிலையில், வெறும் 42,421 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன.
3ம் கட்ட கலந்தாய்வு தரவரிசைப் பட்டியல் கடந்த 24ம் தேதி வெளியிடப்பட்டது. 4ம் கட்ட கலந்தாய்வு இன்று ( 26ம் தேதி)முதல் தொடங்குகிறது. 111.5 முதல் 77.5 இடையேயான கட் ஆப் மதிப்பெண் பெற்ற மாணவ/ மாணவிகள் இதில் கலந்து கொள்ள இருக்கின்றனர் .
கடந்த ( 1.3 லட்சம்)ஆண்டை விட, இந்த ஆண்டு தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கு (1.6 லட்சம்) அதிகமானோர் விண்ணப்பித்திருந்தனர். இருப்பினும், இதுவரை கலந்தாய்வுக்கு விண்ணபித்த 40 சதவீதம் மானவர்கள் பங்குபெறவில்லை.
கடந்த ஆண்டு நடைபெற்ற பொறியியல் கலந்தாயவில் 89,000 இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தன. மேலும், தமிழகத்தில் செயல்படும் 92 தனியார் பொறியியல் போதுமான கட்டமைப்பு இல்லாத காரணத்தால், மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்க கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நான்காம் கட்ட கலந்தாய்வு முடிவுகள் வரும் 28ம் தேதியோடு நிறைவடையும் சூழலில், அரசு கோட்டாவில் உள்ள 60 சதவீத இடங்கள் நிரப்பப்படாமல் போகலாம் என்று கல்வியாளர்கள் கருதுகின்றனர்.