நவ.15-ல் அண்ணா பல்கலையில் தேசிய மாநாடு: மேலாண்மை, கணினி பயன்பாடுகளில் புதுமைகள் குறித்து விவாதம்

அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலைதூர மற்றும் ஆன்லைன் கல்வி மையம், "மேலாண்மை மற்றும் கணினி பயன்பாடுகளில் புதுமைகள்" என்ற தலைப்பில் தேசிய மாநாட்டை வரும் நவம்பர் 15-ம் தேதி நடத்துகிறது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலைதூர மற்றும் ஆன்லைன் கல்வி மையம், "மேலாண்மை மற்றும் கணினி பயன்பாடுகளில் புதுமைகள்" என்ற தலைப்பில் தேசிய மாநாட்டை வரும் நவம்பர் 15-ம் தேதி நடத்துகிறது.

author-image
WebDesk
New Update
anna university xyz

அண்ணா பல்கலைக்கழகம்

புதுமையான ஆராய்ச்சிகளையும், அவற்றின் நடைமுறை பயன்பாடுகளையும் முன்னிலைப்படுத்தும் நோக்கில், அண்ணா பல்கலைக் கழகம் நவ.15-ம் தேதி "மேலாண்மை மற்றும் கணினி பயன்பாடுகளில் புதுமைகள்" (Innovations in Management and Computer Applications) என்ற தலைப்பில் தேசிய மாநாட்டை நடத்துகிறது.

Advertisment

இந்த மாநாட்டை, அண்ணா பல்கலைக் கழகத்தின் தொலைதூர மற்றும் ஆன்லைன் கல்வி மையம் (Centre for Distance and Online Education) ஏற்பாடு செய்கிறது. கல்வித்துறை, தொழில்துறை மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் ஆகியோருக்கு இடையே ஒத்துழைப்பை ஊக்குவிப்பதும் இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.

இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், "வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் நெறிமுறை சார்ந்த மற்றும் நிலையான பயன்பாடுகளை ஆராய்வதும், வணிக செயல்திறனை மேம்படுத்தும் செயல்பாட்டு ஆய்வுகள் (case studies) மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதும் இந்த மாநாட்டின் நோக்கமாகும். மேலும், இது மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு கற்றல் மற்றும் நெட்வொர்க்கிங் வாய்ப்புகளை வழங்கும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநாட்டின் 7 முக்கிய கருப்பொருள்கள்

வணிக மேலாண்மை நடைமுறைகளில் புதுமைகள்.

செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திர கற்றல் (Machine Learning) ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள்.

Advertisment
Advertisements

தரவு பகுப்பாய்வு (Data Analytics), பிக் டேட்டா மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங்.

பொது மற்றும் தனியார் துறைகளில் டிஜிட்டல் உருமாற்றம்.

சைபர் பாதுகாப்பு மற்றும் இடர் மேலாண்மை.

நிலையான வளர்ச்சி மற்றும் பசுமை தொழில்நுட்பங்கள்.

தொழில்முனைவு மற்றும் ஸ்டார்ட்அப் சூழலியல்.

முதுகலை மாணவர்கள், ஆராய்ச்சி அறிஞர்கள், மற்றும் கல்வி நிறுவனங்கள், R&D மையங்கள், அரசு மற்றும் தொழில்முறை நிறுவனங்கள் மற்றும் தொழில்துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்து மாநாட்டில் பங்கேற்பார்கள். ஒவ்வொரு கருப் பொருள் பிரிவிலும் 'சிறந்த ஆய்வுக் கட்டுரைக்கான விருது' (Best research paper award) வழங்கப்படும். மேலும், ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து ஆய்வுக் கட்டுரைகளும் மாநாட்டு முறை தொகுப்பில் (Conference Proceedings) வெளியிடப்பட உள்ளன.

Educational News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: