/tamil-ie/media/media_files/uploads/2019/01/annauniversity_31117m-1ee.jpg)
Anna University Announced New Rules
Anna University UG PG November Results : அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் நவம்பர் மாதம் யூஜி/பிஜி மாணவர்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. டிஸ்டன்ஸ் எஜூகேசன் மூலமாக கல்வி கற்கும் மாணவர்களுக்கான தேர்வு தேதிகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன. எப்போது தேர்வுகள் நடக்க உள்ளன போன்ற தகவல்களும் அண்ணா யுனிவர்சிட்டி இணைய தளத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது.
அந்த தேர்வின் முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளன. முடிவுகள் எப்போது வேண்டுமானாலும் அண்ணா யுனிவர்சிட்டியின் அதிகாரப்பூர்வ இணைய தளங்களான aucoe.annauniv.edu மற்றும் coe1.annauniv.edu-ல் வெளியிடப்படலாம்.
Anna University UG PG November Results Declared at aucoe.annauniv.edu
ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை காண்பதற்காக இந்த இரண்டு இணையங்களுக்கும் செல்வதால் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்வதில் சிறிது நேரம் சிரமம் ஏற்படலாம்.
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இரண்டு இணைய தளத்திற்கு சென்று தேர்வு முடிவுகள் வெளியானதா என்று மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.
இணைப்பு 1 : அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு முடிவுகள்
இணைப்பு 2 : அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு முடிவுகள்
டிஸ்டன்ஸ் எஜூகேசன் மூலமாக கல்வி கற்கும் மாணவர்களுக்கான தேர்வு தேதிகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன. எப்போது தேர்வுகள் நடக்க உள்ளன போன்ற தகவல்களும் அண்ணா யுனிவர்சிட்டி இணைய தளத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது.
அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளையும் நிர்வகிக்கும் தலைமை அமைப்பு ஆகும். எனவே இதன் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்தச் சூழலில் தேர்வு முடிவுகள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.