/tamil-ie/media/media_files/uploads/2018/08/2-16.jpg)
Anna University Counselling
Anna University UG//PG Result Declared at aucoe.annauniv.edu: கடந்த நவம்பர் - டிசம்பரில் நடைப்பெற்ற அண்ணா பல்கலைக்கழக இளங்கலை மற்றும் முதுகலை பிரிவின் முதல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
UG/PG பிரிவில் 2018-ம் ஆண்டு முதல் செமஸ்டர் தேர்வு எழுதியவர்கள், அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ தளமான aucoe.annauniv.edu-யில் தங்களது முடிவை தெரிந்துக் கொள்ளலாம்.
தளத்தை விசிட் செய்த மாணவர்கள், தங்களது பாடப்பிரிவையும், செமஸ்டரையும் தேர்ந்தெடுத்து, ரோல் நம்பர் மற்றும் பிறந்த தேதியை பதிவிட்டு, முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம். பல்கலைக் கழக இணைய தளத்தில் சில பிரச்னைகள் இருப்பதாகவும், அதனால் சிறிது நேரம் கழித்து மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்துக் கொள்ளுமாறும் பல்கலைக்கழக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிவினை தெரிந்துக் கொள்ள...
அண்ணா பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ தளத்தை விசிட் செய்யவும்
முகப்புப் பக்கத்தில் இருக்கும் Ist Sem UG / PG - Nov./Dec.2018 என்ற லிங்கை க்ளிக் செய்யவும்.
புதிய விண்டோ ஒன்று திறக்கும்.
அதில் உங்களுடைய ரோல் நம்பர் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிடவும்.
உங்களுடைய தேர்வு முடிவுகள் இப்போது ஸ்கிரீனில் தெரியும்.
பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.