அண்ணா பல்கலை. செமஸ்டர் ரிசல்ட் வெளியீடு; செக் செய்வது எப்படி?

அண்ணா பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு; ஆன்லைனில் தெரிந்துக் கொள்வது எப்படி?

அண்ணா பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு; ஆன்லைனில் தெரிந்துக் கொள்வது எப்படி?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Anna University

அண்ணா பல்கலைக்கழகம்

இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ரிசல்ட்டை எப்படி தெரிந்துக் கொள்வது என்பதை இப்போது பார்ப்போம்.

Advertisment

ஏப்ரல் மற்றும் மே 2023 இல் நடத்தப்பட்ட இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் UG மற்றும் PG செமஸ்டர் தேர்வுகளில் கலந்து கொண்ட மாணவர்கள் முடிவுகளை http://coe1.annauniv.edu/ அல்லது https://annauniv.edu/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து சரிபார்த்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்: விவசாயிகளுக்கு இலவச ட்ரோன் பயிற்சி; அண்ணா பல்கலை புது முயற்சி

அண்ணா பல்கலைக்கழக UG & PG முடிவுகளை தெரிந்துக் கொள்ள, மாணவர்கள் இணையதளத்தில் உள்ள மாணவர் உள்நுழைவுப் பகுதிக்குச் சென்று தங்களது உள்நுழைவுச் சான்றுகளை உள்ளிட வேண்டும். முடிவுகளை தெரிந்துக் கொள்ள மாணவர்கள் தங்கள் ரோல் எண்ணை உள்ளிட வேண்டும்.

Advertisment
Advertisements

செம்ஸ்டர் தேர்வு முடிவுகளுடன் கூடிய மதிப்பெண் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதேநேரம், அசல் தேர்ச்சி சான்றிதழ் அல்லது மதிப்பெண் பட்டியல் உரிய நேரத்தில் இணையதளத்தில் வெளியிடப்படும்.

அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் 2023ஐ தெரிந்துக் கொள்வது எப்படி?

படி 1: http://coe1.annauniv.edu/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்

படி 2: முகப்புப் பக்கத்தில், UG/PG செமஸ்டர் முடிவுகள் 2023க்கான இணைப்பைக் கிளிக் செய்யவும்.

படி 3: மாணவர் உள்நுழைவு சாளரம் திறக்கும், உங்கள் உள்நுழைவு விவரங்களை உள்ளிட்டு சமர்ப்பிக்கவும்.

படி 4: உங்கள் தேர்வு முடிவுகள் திரையில் காட்டப்படும்.

படி 5: அதைப் பதிவிறக்கி மேலும் குறிப்புக்கு பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும்.

இது தொடர்பான கூடுதல் தகவல் மற்றும் விவரங்களுக்கு, மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Anna University Engineering

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: