தமிழகத்தில் செயல்பட்டு வரும் பல்கலைக்கழகங்கள், ஆய்வு மாணவர்கள், ஆய்வுக்கட்டுரைகள் குறித்த தகவல்களை பல்கலைகழக இணையதளத்தில் வெளியிடாமல், யுஜிசியின் விதிமுறைகளை தொடர்ந்து மீறி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பல்கலைகழக மானிய குழு (UGC) எம்.பில் மற்றும் பிஎச்.டி மாணவர்கள் பெறும் விருதுகள் , ஆண்டு விபரங்கள், கைடுகள் குறித்த விபரங்கள், ஸ்காலர்கள், ஆய்வுக்கட்டுரையின் தலைப்பு, பதிவு செய்யப்பட்ட தேதி உள்ளிட்ட விபரங்களை ஆண்டுதோறும் பல்கலைகழங்கள், தங்களது இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று யுஜிசி விதிமுறைகளை வகுத்துள்ளது. இதன்மூலம், ஒரு கைடு, அனுமதிக்கப்பட்ட ஸ்காலர்களுக்கு மேல் புராஜெக்டுக்கு உதவ முடியாது. இந்த விதிமுறைகளால், ஒரு நம்பகத்தன்மை நிலவிவந்தது
தமிழகத்தில் 19 பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றுள் ஆய்வுக்கட்டுரைகள், ஆய்வு மாணவர்கள் குறித்த யுஜிசி வகுத்த விதிமுறைகளின்படி அண்ணா பல்கலைக்கழகம் மட்டுமே செயல்பட்டு வருகின்றது.
எஞ்சிய 18 பல்கலைகழகங்களில் 13 பல்கலைகழகங்களில் ஸ்காலர்கள் குறித்த தகவல்களே இல்லை.
4 பல்கலைகழக இணையதளத்தில் பல ஆண்டுகள் பழமையான தகவல்களே இடம்பெற்றுள்ளன..
11 பல்கலைகழக இணையதளங்களில் அங்கீகரிக்கப்பட்ட கைடுகள் குறித்த தகவல்களே இல்லை
6 பல்கலைகழக இணையதளங்களில் பழமையான விபரங்களே உள்ளன.
மெட்ராஸ் பல்கலைகழக இணையதளத்தில் எவ்வித தகவலும் முற்றுப்பெறாமல் உள்ளது. ஸ்காலர்கள் மற்றும் கைடுகளின் விபரங்கள் புதிதாக அப்டேட் செய்யப்படவே இல்லை. ஆய்வுக்கட்டுரைகள் தொடர்பான தகவல்களும் அரதப்பழசாகவே உள்ளன.
யுஜிசி விதிமுறைகளின்படி, பேராசிரியர் 8 பிஎச்.டி ஸ்காலர்களுக்கும், அசோசியேட் புரொபசர் 6 ஸ்காலர்களுக்கும் மற்றும் அசிஸ்டெண்ட் புரொபசர் 4 ஸ்காலர்களுக்கும் மட்டும் வழிகாட்ட முடியும்.
இந்த விபரங்கள் வெளியிடப்படாமல், வெளிப்படைத்தன்மை மறைக்கப்படுவதால், ஒரு பேராசிரியரே அதிக ஸ்காலர்களுக்கு வழிகாட்டி வருகிறார். இதனால் ஆய்வுக்கட்டுரைகளின் தரம் பாதிக்கப்படுகிறது.
கைடுகள், ஸ்காலர்களிடமிருந்து பணம் பெறுவதினால், அதிகளவு ஸ்காலர்களுக்கு வழிகாட்டி, அதிகளவிலான பணத்தை ஈட்டுகின்றனர். வணிகமயமான இடத்தில் ஆய்வுக்கட்டுரைகளில் தரம் மற்றும் நம்பகத்தன்மையை நாம் கனவிலும் நினைத்துப்பார்க்க முடியாது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.