Anna University Results 2020 April May: பொறியியல் மாணவர்களுக்கு ரத்து செய்யப்பட்ட செமஸ்டர் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக இறுதி ஆண்டு பருவத் தேர்வை தவிர்த்து, மற்ற ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு தெரிவித்தது.
இதனையடுத்து, ரத்து செய்யப்பட்ட பி.இ, பி.டெக். கல்லூரி பருவத் தேர்வுகளுக்கான மதிப்பெண் வழங்கும் நடைமுறையை அண்ணா பல்கலைக்கழகம் சில நாட்களுக்கு முன் வெளியிட்டது .
செய்முறை அல்லாத பாடங்களில் சென்ற பருவத்தில் மாணாக்கர்கள் பெற்ற புற மதிப்பீட்டு மதிப்பெண்களில்லிருந்து 30 சதவீதமும், இந்த பருவத்தின் அக மதிப்பீ்டு (இன்டர்னல் அசஸ்மென்ட் ) அல்லது தொடர்ச்சியான அகமதிப்பீட்டிலிருந்து 70 சதவீத மதிப்பெண்களையும் கணக்கில் எடுத்து 100 சதவீத மதிப்பெண்களுக்கு கணக்கிடப்படும்.
முந்தைய செமஸ்டரில் அக மதிப்பீட்டுத் தேர்வுக்கு வராத மாணவர்களுக்கு தேர்வு மீண்டும் நடத்த வேண்டும். அத்தகைய மாணவர்களுக்கு திறந்த புத்தகத் தேர்வு அல்லது ஆன்லைன் வழியில் தேர்வுகளை நடத்துமாறு அண்ணா பல்கலைக்கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.
செய்முறை வகுப்புகள் கொண்ட பாடங்களுக்கு, கடந்த செமஸ்டரில் நடத்தி முடிக்கப்பட்ட செய்முறைகளின்படி 100 சதவீத மதிப்பெண்கள் அளிக்கப்படும்” என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்தது.
இந்நிலையில், இறுதி ஆண்டு மாணவர்களைத் தவிர்த்து இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான ஏப்ரல் - மே மாத செமஸ்டர் தேர்வு முடிவுகள் https://www.annauniv.edu/ என்னும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil