scorecardresearch

NEET UG 2021: தேர்வர்கள் கோரிக்கையை ஏற்று காலக்கெடு; ரிசல்ட் தாமதமாகுமா?

விண்ணப்பதாரர்கள் படிவத்தில் என்னென்ன மாற்றங்களைச் செய்யலாம் என்பதை இச்செய்தி தொகுப்பில் காணலாம்

NEET UG 2021: தேர்வர்கள் கோரிக்கையை ஏற்று காலக்கெடு; ரிசல்ட் தாமதமாகுமா?

நீட் தேர்வு முடிவுகளுக்காக லட்சக்கணக்கான மாணவர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், நீட் தேர்வு விண்ணப்பத்தில் பாலினம், மின்னஞ்சல், முகவரி உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்வதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், மேலும் மூன்று நாள்களுக்கு நீட்டிப்பதாகத் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

பல விண்ணப்பதாரர்கள் தேதியை நீட்டிக்கக்கோரி வலியுறுத்தியிருந்த நிலையில், என்டிஏ அக்டோபர் 13 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. அதே போல், அக்டோபர் 13 அன்று ஆன்சர் கீ வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால்,விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்வதற்கான பிராசஸ் முடிந்தபிறகே, OMR ரெஸ்பான்ஸ் ஷீட், ஆன்சர் கீ வெளியிடப்படுவது வழக்கம்.

குறிப்பாக, விண்ணப்பதாரர்கள் நீட் தேர்வு விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள முகவரி ஐடியை சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீட் 2021 விண்ணப்பத்தில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான வசதி, பேஸ் 2 பதிவின் போது வழங்கப்பட்டது. பேஸ் 2 பதிவு, அக்டோபர் 10 ஆம் தேதி நிறைவடைந்தது. அச்சமயத்தில், பேஸ் 1 விண்ணப்பப் படிவத்தில் மட்டுமே திருத்தங்கள் மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டன. விண்ணப்பதாரர்கள் பாலினம், மெயில் ஐடி, பிரிவு, கல்வித் தகுதி உள்ளிட்ட தகவல்களை மாற்றமுடிந்தது.

இந்நிலையில், தற்போது அந்த வசதி மேலும் 3 நாள்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. முக்கியம்சமாக, தற்போது பேஸ் 2 பதிவு விண்ணப்பத்திலும் மாற்றங்களை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், நீட் UG 2021 கவுன்சிலிங்கிற்கு ஆன்லைனில் நிரப்பப்பட்ட பேஸ் 1 மற்றும் பேஸ் 2 விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான கடைசி மற்றும் இறுதி வாய்ப்பாகும்” என குறிப்பிட்டுள்ளனர்.

விண்ணப்பதாரர்கள் படிவத்தில் என்னென்ன மாற்றங்களைச் செய்யலாம்

  • பாலினம்
  • குடியுரிமை
  • மெயில் ஐடி
  • பிரிவு
  • உட்பிரிவு
  • கல்வித்தகுதி

இத்துடன் பேஸ் 2 பதிவில் குறிப்பிட்ட விவரங்களை மாற்றிக்கொள்ளலாம். நீட் ஆன்சர் கீ, தேர்வு முடிவு உள்ளிட்டவை குறித்த தகவல்களை என்டிஏயின் அதிகாரப்பூர்வ தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Application correction facility extended for neet ug