செவிலியர்களின் கவனத்திற்கு.. உங்களுக்கு ரூ. 90,000 சம்பளத்தில் வேலை!

மூன்று வருட பணி அனுபவத்துடன் 34 வயதிற்குட்பட்ட பெண் செவிலியர்கள தேவை

செவிலியர்கள் படிப்பை முடித்தவர்களுக்கு ரூ. 90,000 ஊதியத்தில் சவுதி அரேபியாவில் வேலை காத்துக் கொண்டு இருப்பதாக சென்னையிலுள்ள அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

செலிவிலியர்கள் தேவை:

பொதுவாகவே, செவிலியர்களுக்கு வெளிநாடுகளில் அதிகப்படியான வேலைவாய்ப்புகள் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் இந்த பணியிடங்கள் தேர்வுகள் மூலமே நிரப்படும். இந்த தேர்வில் தேர்ந்தெடுக்கப்படுபவ்ர்கள் அனுபவம் மற்றும் மதிப்பெண் அடிப்படையில் பணியில் அமர்த்தப்படுவார்கள்.

அந்த வகையில் சவுதி அரேபிய நாட்டின், ரியாத் நகரிலுள்ள கிங் சவுத் மெடிக்கல் சிட்டி மருத்துவமனையில் செவிலியர்களுக்கு வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் பி.எஸ்.சி/எம்.எஸ்.சி/பி.எச்.டி தேர்ச்சி பெற்ற மூன்று வருட பணி அனுபவத்துடன் 34 வயதிற்குட்பட்ட பெண் செவிலியர்கள தேவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தகுதி:

இதற்கான நேர்முகத் தேர்வு நாளை 28.10.2018 முதல் 31.10.2018 வரை டெல்லியில் நடைபெற உள்ளது. இதற்காக ஏற்கனவே விண்ணப்பித்தவர்களுக்கு தொலைப்பேசி அழைப்பு மூலம் அழைக்கபடுவார்கள்.

தேர்ந்தெடுக்கப்படும் எம்.எஸ்.சி முடித்த செவிலியர்களுக்கு ரூ.90,000/- மற்றும் பி.எஸ்.சி முடித்த செவிலியர்களுக்கு ரூ.80,000/- என அனுபவத்திற்கேற்றவாறு மாத ஊதியமும், இலவச விமான டிக்கெட், உணவு, இருப்பிடம், விசா, மருத்துவச் சலுகை, போக்குவரத்து, 30 நாட்கள் சம்பளத்துடன் கூடிய வருடாந்திர விடுப்பு மற்றும் சவூதி அரேபிய அமைச்சகத்தின் சட்டத்திட்டத்திற்குட்பட்ட இதர சலுகைகளும் வழங்கப்படும்.

இதுக்குறித்த மேலும் விவரங்களுக்கு ovemclmohsa2018@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை அனுகவும்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Education-jobs news in Tamil.

×Close
×Close