scorecardresearch

ஆவடியில் தொழில் பழகுநர் பயிற்சி: டிகிரி, டிப்ளமோ பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

ஆவடி கனரக வாகன தொழிற்சாலையில் தொழில் பழகுநர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

Applications are invited for Apprenticeship Training at Avadi Heavy Industries
ஆவடி கனரக தொழிற்சாலையில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் அழைக்கப்படுகின்றன.

சென்னை ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையில் தொழில் பழகுநர் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதற்கு 2020, 2021, 2022இல் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவார்கள்.

ஓராண்டு பயிற்சி

இதில் டிகிரி முடித்தவர்களுக்கு 214 பணியிடங்கள் உள்ளன. இது ஓராண்டு கால தற்காலிக பயிற்சி ஆகும். பணி நிரந்தம் கிடையாது. இதில், கம்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிஸ் பொறியியல், எலக்ட்ரானிஸ் அண்ட் கம்யூனிகேசன், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் ஆகிய பொறியியல் உள்ளிட்ட துறைகளில் பட்டம் பெற்றவர்கள், டிப்ளமோ பட்டயம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்

இந்தத் தொழில் பயிற்சியின்போது பட்டம் பெற்றவர்களுக்கு ரூ.9 ஆயிரம் டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.8 ஆயிரமும் சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

இந்தப் பணிக்கு டிகிரி மற்றும் டிப்ளமோவில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் இந்தப் பணிக்கு http://www.mhrdnats.gov.in/ – என்ற அப்ரண்டிஸ் இணையதளப் பக்கத்தில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின்னர், அதே தளத்தில் “COMBAT VEHICLES RESEARCH AND DEVELOPMENT ESTABLISHMENT” என்பதை கிளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க மே 12 கடைசி நாளாகும். வெரிபிகேஷன் 29,30,31 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Applications are invited for apprenticeship training at avadi heavy industries