Tamil Nadu Jobs | Cuddalore | கடலூர் நெய்வேலியில் செயல்பட்டுவரும் பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி-யில் தொழிலக பயிற்சி மற்றும் டெக்னிக்கல் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதற்கு எல்.ஐ.சி. நிறுவனத்தில் நிலம் வழங்கிய வாரிசுகள் மட்டும் விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்து முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை ஆன்லைனில் அனுப்ப ஏப்.19 கடைசி நாள் ஆகும்.
பயிற்சி காலம் : 3 ஆண்டுகள்
காலி பணியிடங்கள் : 100
பணி : இன்டஸ்டரியல் ட்ரெய்னி (எஸ்எம்இ) (ஓஅண்ட்எம்) டெக்னிக்கல்
உதவித் தொகை : முதல் ஆண்டு மாதம் ரூ.18000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.20 ஆயிரம், மூன்றாம் ஆண்டு 22 ஆயிரம் ஆகும்.
வயது வரம்பு
இந்தப் பணிக்கு 1.3.2024ஆம் தேதியின்படி, பொது பிரிவினர் 37 வயதுக்குள்ளும், எஸ்.சி., எஸ்.டி பிரிவினர் 42 வயதுக்குள்ளும், ஓ.பி.சி பிரிவினர் 40 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும்.
கல்வித் தகுதி
இதற்குப் என்ஜினீயரிங் பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
பயிற்சி : Industrial trainee (Mines & Mines suport services)
காலிபணியிடங்கள் : 39
பயிற்சி காலம் : 3 ஆண்டுகள்
உதவித் தொகை : முதலாம் ஆண்டு ரூ.14 ஆயிரம், இரண்டாம் ஆண்டு ரூ.16 ஆயிரம், மூன்றாம் ஆண்டு ரூ.18 ஆயிரம் வழங்கப்படும்.
இந்தப் பணிக்கு வயது வயது 1.3.2024 தேதியின்படி பொது பிரிவினர் 37 வயதுக்குள்ளும், எஸ்சி, எஸ்.டி பிரிவினர் 42 வயதுக்குள்ளும், ஒ.பி.சி பிரிவினர் 40 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும்.
இந்தப் பணிக்கு பிட்டர், டர்னர், எலக்ட்ரீசியன், வெல்டிங், எம்எம்வி, டீசல் மெக்கானிக் போன்ற ஏதாவது பாடப்பிரிவில் ஐ.டி.ஐ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை
இந்தப் பணிகளுக்கு என்.எல்.சி. நிறுவனத்தால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இந்தத் தகவல்கள் மின்னஞ்சல் மூலமாக தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் 19.4.2024 ஆகும். இந்தப் பணிக்கு www.nlcindia.in என்ற முகவரியில் விண்ணப்பிக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“