Advertisment

சென்னை காவல்துறையில் இளநிலை செய்தியாளர் பணி; எப்படி விண்ணப்பிப்பது?

சென்னை காவல்துறையில் இளநிலை செய்தியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணிக்கு மொத்தம் 54 காலி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

author-image
WebDesk
New Update
police exam1.jpg

இணைய வழியில் விண்ணப்பங்களை சமர்பிக்க ஏப்.15,2024 கடைசி நாளாகும்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Police Constable | Tamil Nadu Jobs | சென்னை காவல்துறையில் இளநிலை செய்தியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் தமிழை ஒரு பாடமாக கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்தப் பணிக்கு மொத்தம் 54 காலி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இணைய வழியில் விண்ணப்பங்களை சமர்பிக்க ஏப்.15,2024 கடைசி நாளாகும்.

Advertisment

விண்ணப்ப கட்டணத்தை மே 4ஆம் தேதி இரவு 11 மணிக்குள் ஆன்லைனில் செலுத்திக் கொள்ளலாம். எனினும் இந்தப் பணிக்கான தேர்வு தேதி இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

தேர்வு மற்றும் நேர்காணல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு எஸ்.சி, எஸ்.டி மற்றும் எஸ்.சி (ஏ) பிரிவினர் 18-37 வயது வரை பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

ஓ.பி.சி பிரிவினர் 18-34 வயது வரையும், பி.சி.எம். உள்ளிட்ட இதர பிரிவினர் 18-32 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.

இந்தப் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் தமிழை ஒரு பாடமாக எடுத்து கட்டாயம் படித்திருக்க வேண்டும். ஆங்கிலத்தில் முதுகலை படித்திருக்க வேண்டும். மேலும், தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து திறனும் அவசியம்.

இதற்கான விண்ணப்பப்படிவத்தை eservices.tnpolice.gov.in / என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, “The Chairman, Selection Committee, Police Shorthand Bureau, HQ, 2-nd floor, Old Coastal Security Group Building, DGP office complex, Mylapore, Chennai- 600 004” என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பத்தை அனுப்பி வைக்க ஏப்.15, 2024 கடைசி நாளாகும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Police Constable Tamil Nadu Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment