/indian-express-tamil/media/media_files/2025/11/03/srmjee-2025-11-03-08-44-39.jpg)
எஸ்.ஆர்.எம். நுழைவுத் தேர்வு அறிவிப்பு: விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம் இங்கே!
எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (SRMIST) 2026-ஆம் ஆண்டுக்கான எஸ்.ஆர்.எம். ஜே.இ.இ (SRM Joint Entrance Examination) நுழைவுத்தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பொறியியல், தொழில்நுட்பம், மேலாண்மை, சட்டம், மருத்துவம் மற்றும் சுகாதார அறிவியல், அறிவியல் மற்றும் வேளாண் அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் தற்போது விண்ணப்பிக்கப் படுகின்றன.
விண்ணப்பத் தொடக்கம் மற்றும் வளாகங்கள்
அனைத்துப் படிப்புகளுக்கான விண்ணப்பங்களும் இன்று (திங்கட்கிழமை, நவ.3) நண்பகல் 12 மணி முதல் ஆன்லைனில் கிடைக்கின்றன. விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: www.srmist.edu.in. காட்டாங்கொளத்தூர், ராமபுரம், வடபழனி, அச்சரப்பாக்கம், திருச்சி, டெல்லி-என்.சி.ஆர் வளாகங்கள் மற்றும் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், சோனேபட், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், அமராவதி ஆகிய இடங்களில் உள்ள வளாகங்களுக்கு இந்த நுழைவுத் தேர்வுகள் நடைபெறும்.
| கல்வி நிலை | தேர்வு பெயர் | கட்டங்கள் | நுழைவுத் தேர்வு தேதிகள் | விண்ணப்பிக்க கடைசிநாள் |
| இளநிலை பொறியியல் (B.Tech, Integrated M.Tech) | SRMJEE 2026 | 3 கட்டங்கள் | ஏப். 23 - 28, ஜூன் 10 - 15, ஜூலை 4 - 5 | ஏப்ரல் 16, ஜூன் 4, ஜூன் 30 |
| முதுநிலை பொறியியல் (M.Tech) | 3 கட்டங்கள் | மார்ச் 14, மே 16, ஜூலை 15 | மார்ச் 9, மே 11, ஜூலை 10 | |
| எம்.பி.ஏ (MBA) | 3 கட்டங்கள் | பிப்.28, ஏப்ரல் 17 & 18, ஜூன் 5 & 6 | - | |
| மருத்துவம் & சுகாதார அறிவியல், சட்டம், LLB (இளநிலை & முதுநிலை) | 2 கட்டங்கள் | ஏப்ரல் 17 & 18, ஜூன் 5 & 6 | - | |
| முதுநிலை மருத்துவப் படிப்புகள் (Post-PG Medical) | 1 கட்டம் | ஏப்ரல் 17 & 18 | - |
முக்கிய குறிப்பு: விண்ணப்பதாரர்கள் தங்கள் வீட்டிலிருந்தே மடிக்கணினி (Laptop) அல்லது கணினி (Desktop) மூலம் இந்தத் தொலைதூரக் கட்டுப்பாட்டு ஆன்லைன் முறைத் தேர்வை (Remote Proctored Online Mode) எழுதலாம்.
உதவித்தொகை மற்றும் வேலைவாய்ப்பு விவரங்கள்
2024–25-ஆம் கல்வியாண்டில் பட்டம் பெற்ற மாணவர்களுக்கு, வேலைவாய்ப்புத் தேர்வுகள் மூலம் 14,030-க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன. முதலிடம் பெறும் மாணவர்களுக்கு, கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் 100% தள்ளுபடி வழங்கும் நிறுவனர் உதவித்தொகையை (Founder’s Scholarship) நிறுவனம் வழங்குகிறது. மாணவர்கள் பெறும் தரவரிசை அடிப்படையில், 3 கட்டங்களிலும் 25% முதல் 100% வரை தகுதி அடிப்படையிலான (Merit Scholarships) உதவித்தொகை பெறலாம். இது வளாகத்திற்கு ஏற்ப மாறுபடும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us