/tamil-ie/media/media_files/uploads/2018/01/jobs.jpg)
jobs
TNPSC Recruiting for Asst. System Engineer & Analyst Posts: தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன், அசிஸ்டெண்ட் சிஸ்டம் இன்ஜினியர் மற்றும் அசிஸ்டெண்ட் சிஸ்டம் அனலைஸ்ட் ஆகிய 60 காலியிடங்களை பூர்த்தி செய்வதற்கான ஆள் சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
தமிழக அரசில் வேலை வேண்டும் என்போர் இந்த வாய்ப்பினை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கான விண்ணப்பங்கள் 22.01.2019 அன்றே வெளியாகிவிட்ட நிலையில், இதனை அப்ளை செய்வதற்கான கடைசி தேதி, 20.02.2019. அதாவது இதற்கு விண்ணப்பிக்க இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளது.
எப்படி அப்ளை செய்வது?
டி.என்.பி.எஸ்.சி-யின் அதிகாரப்பூர்வ தளமான www.tnpsc.gov.in-ஐ விசிட் செய்து இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி
அசிஸ்டெண்ட் சிஸ்டம் இன்ஜினியர் (36) - கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியர், கம்ப்யூட்டர் இன்ஜினியர், ஐ.டி, எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியர் இவற்றில் ஏதாவது ஒன்றை முதன்மை பாடமாகக் கொண்டு, B.E அல்லது B. Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அல்லது வேறு ஏதேனும் பி.இ, பி.டெக் பட்டத்துடன் பள்ளியில் கணிதம், வேதியியல், மற்றும் இயற்பியலை முதன்மை பாடமாகக் கொண்டு பயின்றிருக்க வேண்டும்.
அசிஸ்டெண்ட் சிஸ்டம் அனலைஸ்ட் (24) - கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியர், கம்ப்யூட்டர் இன்ஜினியர், ஐ.டி, எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியர் இவற்றில் ஏதாவது ஒன்றை முதன்மை பாடமாகக் கொண்டு, B.E அல்லது B. Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பள்ளியில் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் கட்டாயம் பயின்றிருக்க வேண்டும்.
வயது
பொது பிரிவினருக்கு 21-30-க்குள் இருக்க வேண்டும்.
எம்.பி.சி, பி.சி - 21-32 வரை
எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு - 35-வரை இருக்கலாம்.
மேலும் தகவல்களுக்கு http://www.tnpsc.gov.in/ தளத்தை அணுகவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.