கட்டுமான துறையில் கட்டிடங்களை தாண்டி கட்டிட கலை எனும் தொழில் நுட்பம் முக்கிய பங்கு வகிப்பது குறித்தும், கட்டிடக்கலை துறை சார்ந்த நவீன தொழில் நுட்பம், வேலை வாய்ப்புகள், மேற்படிப்புகள் என அனைத்து தகவல்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் கட்டிடக்கலை கண்காட்சி கோவையில் நடைபெற்றது.
கோவை அவினாசி சாலை சிட்ரா அரங்கில் கோழிக்கோட்டில் உள்ள அவனி டிசைன் கல்லூரி சார்பாக ”அவனி ரீச் 24" கட்டிடக் கலை சம்பந்தமான பயிற்சி முகாம் நடைபெற்றது.
இந்த பயிற்சி முகாமில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட எண்ணற்ற மாணவ மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் கட்டிட கலை தொடர்பான அனைத்து தொழில் நுட்பங்களையும் தகவல்களையும் கட்டிடக்கலை நிபுணர்கள் செயல் விளக்கமாக கொடுத்து பயிற்சி அளித்தனர்.
தொடர்ந்து பேசிய நிபுணர்கள், தற்போதுள்ள காலகட்டத்தில் அனைத்து மாணவர்களும் பள்ளியில் இருந்து மேற்படிப்பில் ஆர்வம் காட்டி வரும் நிலையில், அதில் நாங்கள் பகுப்பாய்வு செய்ததில் எண்ணற்ற மாணவ மாணவர்கள் கட்டுமானத்துறையில் குறிப்பாக கட்டிடக்கலையில் ஆர்வம் காட்டி வருகின்றனர் என தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களின் திறமைகளை வெளிக் கொண்டு வரும் வகையில் இவ்வாறான செயல்முறை விளக்கங்களை ஒவ்வொரு மாநிலமாக சென்று அளித்து வருகின்றோம். மேலும் பல மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தில் மாணவ மாணவர்கள் கட்டிட கலைத்துறையில் அதிக கவனம் செலுத்துவதாக கட்டிடக்கலை நிபுணர்கள் தெரிவித்தனர்.
கோழிக்கோட்டில் உள்ள அவனி டிசைன் கல்லூரி சார்பாக நடைபெற்ற இப்பயிற்சி முகாமில் கட்டிடகலை நிபுணர்கள் மற்றும் துறை தலைவர்கள் சாம் சார்லஸ் தேவானந்த், காட்வின் இம்மானுவேல், ஓபிலியா வினோதினி மற்றும் அன்சு ஜார்ஜ் ஆகியோர் மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“