அரியலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இடைநிலை ஆசிரியர் தகுதி உள்ளவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
அரியலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் உள்ள ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 18 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 18.01.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்: UPSC Exam: லீ கார்பூசியர், குடியுரிமைச் சட்டம், ஆன்லைன் கேம்களுக்கான ஜி.எஸ்.டி… முக்கிய டாபிக்ஸ் இங்கே!
ஆசிரியர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 18
கல்வித் தகுதி : தமிழ்நாடு அரசின் ஆசிரியர்களுக்கான வரையறுக்கப்பட்ட கல்வி தகுதிகளுடன், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
தொகுப்பு ஊதியம் : ரூ. 7,500
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி : மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், அறை எண்: 35, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரியலூர் மாவட்டம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 18.01.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s319f3cd308f1455b3fa09a282e0d496f4/uploads/2023/01/2023011093.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil