scorecardresearch

சமூக நலத் துறை வேலை வாய்ப்பு; 8-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

அரியலூர் மாவட்ட சமூக நலத்துறை வேலை வாய்ப்பு; 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

tn govt jobs
tn govt jobs

அரியலூர் மாவட்ட சமூக நலத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் பெண்களுக்கான சகி ஒருங்கிணைந்த சேவை மையத்தில், உதவியலாளர் மற்றும் பாதுகாவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 24.03.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்: சமூக நலத் துறை வேலை வாய்ப்பு; 8-ம் வகுப்பு படித்தவர்கள் உடனே விண்ணப்பிங்க!

பல்நோக்கு உதவியலாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 21 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 6,400

பாதுகாவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 21 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 10,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s319f3cd308f1455b3fa09a282e0d496f4/uploads/2023/03/2023031368.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். இந்தப் பணியிடங்களுக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

முகவரி : ”சகி” ஒருங்கிணைந்த சேவை மையம், அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம், அரியலூர் சித்தா மருத்துவம் எதிரில், அரியலூர் – 621704.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 24.03.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s319f3cd308f1455b3fa09a282e0d496f4/uploads/2023/03/2023031380.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Ariyalur social welfare department assistant jobs 2023 apply soon