New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/22/tn-govt-jobs-2025-06-22-15-35-37.jpg)
அரியலூர் மாவட்ட சமூக நலத்துறை வேலை வாய்ப்பு; 8 ஆம் வகுப்பு, படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்; தேர்வு முறை இதுதான்!
அரியலூர் மாவட்ட சமூக நலத் துறையின் கீழ் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் வாயிலாக செயல்படும் தொட்டில் குழந்தை திட்டத்தில் காவலர் பணியிடத்தை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 31.07.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
பாதுகாவலர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: இந்தப் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 42 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 4,500
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s319f3cd308f1455b3fa09a282e0d496f4/uploads/2025/07/17531611544803.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். இந்தப் பணிக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.
முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, இரண்டாவது தளம், அரசு பல்துறை வளாகம், ஜெயங்கொண்டம் சாலை, அரியலூர் - 621704
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.07.2025
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.