Advertisment

Army Public School Recruitment 2019: ராணுவ பள்ளிகளில் குவியும் வேலை வாய்ப்பு - விண்ணப்பிக்க செப்.22 கடைசி நாள்

AWES Released Job Notification for TGT, PRT and PGT Posts: டிஜிடி மற்றும் பிஆர்டிக்கான குறைந்தபட்ச தகுதி 50 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். டிஜிடி பதவிக்கு விண்ணப்பிப்பவர்களும் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் பி.எட். பட்டம் பெற்றிருக்க வேண்டும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Army Public Schools pgt tgt prt vacancies 2019 announced: ராணுவ பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான விண்ணப்பம்

Army Public Schools pgt tgt prt vacancies 2019 announced: ராணுவ பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான விண்ணப்பம்

Army Public School Recruitment Notification for PGT, TGT and PRT Posts: இராணுவ நல கல்விச் சங்கம் (AWES) பிஜிடி, டிஜிடி மற்றும் பிஆர்டிக்கான ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் 137 இராணுவ பொதுப் பள்ளிகள் (ஏபிஎஸ்) பல்வேறு கண்டோன்மென்ட் மற்றும் ராணுவ நிலையங்களில் உள்ளன. இந்த பள்ளிகளில் சுமார் 8,000 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். பல்வேறு காரணங்களால் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமானோர் பணியிலிருந்து திரும்பி வருகின்றனர். காலியாக உள்ள அனைத்து பதவிகளுக்கும் ஆட்சேர்ப்பு செய்யப்படுகிறது. நேர்காணல்கள் / கற்பித்தல் திறன்களை மதிப்பீடு செய்வதற்கான விளம்பரம் செய்யும் போது அந்தந்த பள்ளியில் இருக்கும் காலியிடங்களின் சரியான எண்ணிக்கை பள்ளி / நிர்வாகத்தால் அறிவிக்கப்படும்.

Advertisment

காலியிடங்கள் ரெகுலர் அல்லது நிரந்தர அமைப்பின் படி இருக்கலாம். அறிவிக்கப்படும் காலியிடங்களின் எண்ணிக்கையுடன் அந்தந்த பணியின் தன்மை குறித்தும் வெளியிடப்படும்.

தகுதியானவர்கள் 2019 செப்டம்பர் 22 வரை ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். ஸ்கிரீனிங் தேர்வுக்கான அட்மிட் கார்டு 2019 அக்டோபர் 4 ஆம் தேதி வெளியிடப்படும். இத்தேர்வு அக்டோபர் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளிலும் நடைபெறும். ஸ்கிரீனிங் தேர்வுக்கான முடிவுகள் அக்டோபர் 30, 2019 அன்று வெளியிடப்படும்.

பி.ஜி.டிக்கு குறைந்தபட்ச தகுதி 50 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். வேட்பாளர்கள் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் பி.எட். பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

டிஜிடி மற்றும் பிஆர்டிக்கான குறைந்தபட்ச தகுதி 50 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். டிஜிடி பதவிக்கு விண்ணப்பிப்பவர்களும் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் பி.எட். பட்டம் பெற்றிருக்க வேண்டும். பிஆர்டி போஸ்ட்டுக்கு விண்ணபிக்க, விண்ணப்பதாரர் பி.எட். பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் இரண்டு ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment