arrears Exam and Chennai High Court : நிலுவையில் உள்ள அரியர் தேர்வுகளை நடத்தப்படாமல் மாநில பல்கலைக்கழகங்கள் தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த இடைக்கால உத்தரவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.
மேலும், அரியர் தேர்வுகளை ரத்து செய்யும் உத்தரவை அரசு நிறைவேற்றியிருந்தாலும், நிலுவைத் தேர்வுகளை நடத்த பல்கலைக்கழகங்களுக்கு சுதந்திரம் உள்ளது என்றும் அமர்வு தெளிவுபடுத்தியது. தேர்வுகளை ஆன்லைன் மூலமாகவும், ஆஃப்லைன் மூலமாகவும் அல்லது இரண்டின் கலவையாக நடத்தப்படலாம் என்று நீதிமன்றம் தெரிவித்தது.
கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, இறுதி ஆண்டு பருவத் தேர்வு தவிர, பல்கலைக்கழகங்கள், கலை, அறிவியல் கல்லூரிகளின் அரியர்ஸ் தேர்வுகள், தொழில்நுட்பக் கல்லூரிகளின் அரியர்ஸ் தேர்வுகளை முதல்வர் பழனிசாமி முன்னதாக ரத்து செய்தார். மேலும், அரியர்ஸ் தேர்வு எழுத தேர்வுக் கட்டணம் செலுத்திய அனைத்து அரியர்ஸ் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தார்.
அரியர் தேர்வுகளை நடத்தாமல் முடிவுகளை வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதிக்கக்கோரி அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தியன் தாக்கல் செய்த மனுவை விசாரித்து வருகிறது.
மேலும், நீதிமன்ற நடவடிக்கைகளை சீர்குலைப்பது மற்றும் யூடியூபில் வழக்கு விசாரணையை லைவ் ஸ்ட்ரீமிங் செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு மாணவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று நீதிபதிகள் எச்சரித்தனர். இனிமேல் வழக்கின் விசாரணை நேரடியாக நடைபெறும் என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.
முன்னதாக, அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது என்று பல்கலைக்கழக மானியக்குழு சென்னை உயர்நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்தது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook
Web Title:Arrears exam cancellation go madras high court passed interim judgement