பழனியில் உள்ள அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் ஆசிரியர் மற்றும் எழுத்தர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 06.08.2024 அன்று நடைபெறும் நேர்காணலில் நேரடியாக கலந்துக் கொள்ளலாம்.
ஆசிரியர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 4
தமிழ் – 2
வேதியியல் – 2
கல்வித் தகுதி: பி.ஹெச்.டி படித்திருக்க வேண்டும். நெட்/ஸ்லெட்/செட் தேர்வுகளில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
எழுத்தர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: தமிழக அரசு விதிகளின் படி வயது வரம்பு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு https://apcac.edu.in/ என்ற இணையதளப் பக்கத்தில் முதலில் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் நடைபெறும் நேர்காணலில் நேரடியாக கலந்துக் கொள்ள வேண்டும்.
முகவரி: அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி, பழனி – 624601, திண்டுக்கல்.
நேர்காணல் நடைபெறும் தேதி: 06.08.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழ்கண்ட அறிவிப்பைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“