அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் 150 பணியிடங்கள்; 10-ம் வகுப்பு, ஐ.டி.ஐ தகுதி; உடனே விண்ணப்பிங்க!

நீலகிரி அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை வேலைவாய்ப்பு; 150 பணியிடங்கள்; 10 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

நீலகிரி அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை வேலைவாய்ப்பு; 150 பணியிடங்கள்; 10 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
cordite jobs

நீலகிரி அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை வேலைவாய்ப்பு

தமிழகத்தில், நீலகிரி மாவட்டம் அருவங்காட்டில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலையில் (Cordite Factory) 10 ஆம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 150 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 21.06.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

மத்திய அரசு நிறுவனமான கார்டைட் ஃபேக்டரியில் கெமிக்கல் ப்ராசசர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இதையும் படியுங்கள்: தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் வேலை; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

Chemical Processor Worker

Advertisment
Advertisements

காலியிடங்களின் எண்ணிக்கை: 150

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மற்றும் NAC / NTC in AOCP Trade முடித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 01.06.2023 அன்று 18 முதல் 30 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்: ரூ. 19,900

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு ஐ.டி.ஐ டிரேடு படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அல்லது செய்முறைத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cordite.co.in/uploads/app_form_cfa_cpw_6_2023.pdf என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: The General Manager, Cordite Factory, Aruvankadu, The Nilgiris District. Tamilnadu Pin -643 202.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 21.06.2023.

மேலும் விவரங்களுக்கு https://cordite.co.in/uploads/notification_cfa_cpw_6_2023.pdf என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs Tamil Nadu Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: